• Jul 24 2025

'கிசி கா பாய் கிஸி கி ஜான்' சிறப்புக் காட்சி ரத்து... அதிரடி முடிவெடுத்த சல்மான் கான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

2014ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் 'வீரம்'. இப்படமானது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது. தமிழில் வீரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படம் தெலுங்கில் 'கட்டமராயுடன்' என்ற பெயரில் இப்படம் ரீமேக்கானது. அதில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். 


தமிழை போல் தெலுங்கிலும் பல மாஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கிலும் அமோக வெற்றிபெற்று கோடிக்கணக்கில் வசூலை அள்ளியது. இவ்வாறாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெற்றி பெற்ற இப்படம் இந்தியில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக்காகி இன்றைய தினம் உலகம் முழுவம் வெளியாகி உள்ளது. 


இந்நிலையில் நேற்று கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட இருந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மனைவி பமீலா சோப்ரா நேற்று உயிரிழந்த நிலையில், இந்தி பிரபலங்கள் அதில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அமையும் வகையில் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் சல்மான் கான் ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement