• Jul 25 2025

19 மாடி ஓட்டல் கட்டும் நடிகர் சல்மான்கான்.. யார் பெயரில் தெரியுமா? அசந்து போன ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

.மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. 

இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement