• Jul 24 2025

இரவு பார்ட்டியில் கையில் சரக்கு பாட்டிலுடன் ஊ சொல்லுறியா பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றதில் இருந்து, சமந்தா தன்னுடைய வாழ்க்கையில் பல போராட்டங்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். 

அதில் மிகவும் முக்கியமானது, மயோசிட்டிஸ் பிரச்சனை. சைதன்யாவை பிரிந்த பின்னர் சுமார் 6 மாதத்திற்கு மேல், எழுந்து நிற்க கூட முடியாத நிலையில், மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர் சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.


பின்னர் ஒருவழியாக, அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கிய நிலையில், இவர் நடிப்பில் வெளியான யசோதா, மற்றும் சகுந்தலம் ஆகிய இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், சமந்தாவுக்கு ஷாக் கொடுத்தது.

இதை தொடர்ந்து, தற்போது சமந்தா தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்னம் படத்தில் நடித்து முடித்தள்ளார். இப்படத்தின் என்ரோஜா நீயே... என்னும் பாடல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.


இதனை அடுத்த வெப் சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சமந்தா, அண்மையில் தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்று கையில் சரக்குடன் ஊ சொல்லுறியா மாமா ஊஊ சொல்லுறியா மாமா என்னும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement