• Jul 24 2025

"தி ஃபேமிலி மேன்" இயக்குநர்களுடன் மீண்டும் இணைந்த சமந்தா-ஸ்டைலிஷ் உளவாளியாக வெளியான புதிய தோற்றம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில்  இறுதியாக'யசோதா' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தா 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

 சமீபத்தில் சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.இந்நிலையில் தற்போது சமந்தா மீண்டும் நடிக்க களம் இறங்கியுள்ளார். 


அதன்படி ராஜ் மற்றும் டீ.கே இயக்கும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் வரும் சமந்தாவின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் மாடர்ன் தோற்றத்தில் சமந்தா ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 


சமந்தா முன்பு நடித்த ஃபேமிலி மேன் சீரிஸ் இயக்குநர் இரட்டையர் ராஜ் மற்றும் டிகே இது குறித்து, "இந்த பவர்ஹவுஸுடன் மீண்டும் இணைவதில் மிகுந்த உற்சாகம்! சமந்தா பிரபு சிட்டாடல் உலகிற்கு வருக! இப்போது படப்பிடிப்பு நடக்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement