• Jul 25 2025

முரட்டுப் பார்வையில் மிரட்டும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா; காதலர் தின வாழ்த்தையும் கூறுயுள்ளார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌ நடிகை சமந்தா.இவரது நடிப்பில் இறுதியாக  கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி யசோதா திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.வாடகைத் தாயாக  சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின்னர் அவர் சோலோ ஹுரோயினாக நடித்து வரும் திரைப்படம் தான் “சகுந்தலம்”.பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்குகின்றார்.


இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜினின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

இது தவிர சமந்தா, தெலுங்கில்  'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை சமந்தா பதிவிட்டுள்ளார். 


அதில், "இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டு தான் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வரும் புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் 1 மில்லியன் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. நடிகைகள் மிருணாள் தாகூர் & பார்வதி திருவொத்து ஆகியோர் இந்த புகைப்படத்தை முறையே Best, என கமெண்ட் செய்து பாராட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement