தென்னிந்திய திரையுலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா.
இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும். அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அந்தவகையில் தற்போது தனது கெரியரில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார்.
இந்நிலையில் சமந்தா பாலிவுட்டில் களமிறங்க இருக்கிறார் என செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சமந்தா காபி வித் கரண் ஷோவில் கலந்துகொண்டிருக்கும் ப்ரொமோ வெளியாகி இருந்தது. அதில் சமந்தா திருமண வாழ்க்கை பற்றி பேசி இருந்தார்.
மேலும் அந்த ஷோவில் சமந்தா அக்ஷய் குமார் உடன் தான் கலந்துகொண்டிருந்தனர். அக்ஷய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தான் சமந்தா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை கரண் ஜோகர் தான் தாயாரிக்கிறாராம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு காபி வித் கரண் ஷோவில் தான் வெளியிடப்போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- நான் நடிச்ச பாத்ரூம் சீனுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க; நடிகை பூமிகா
- பிக்பாஸ் சீசன்-6 எப்போது ஆரம்பம் தெரியுமா..? தொகுப்பாளருடன் வெளியான முதல் போட்டியாளர்..!
- நடிகர் டி.ராஜேந்தர் தற்போது எப்படி உள்ளார்..?
- புஷ்பா 2 படத்தில் இணையும் தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகன்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- நடிகையுடன் தங்கியிருந்த பிரபல நடிகர்-கோட்டலிற்கு நேராக வந்த செருப்பை நீட்டிய மனைவியால் பெரும் சலசலப்பு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!