• Jul 25 2025

சமந்தாவின் மாஜி கணவருடன் வெளிநாட்டுக்கு பறந்த காதலி..வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர் நாகசைதன்யா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிகை சமந்தாவுடன் ஜோடியாக நடித்து அடுத்தடுத்த படங்களில் அவருடன் நடித்து வந்தார்.

மேலும்  அப்படி நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து கடந்த ஆண்டு பிரிந்தனர்.

அதன்பின் தங்கள் வேலைகளில்  பிஸியாக இருக்கும்  நாக சைதன்யா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவை பார்த்து விசாரித்ததாகவும் கால் செய்து பேசியதாகவும் தகவல் வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அப்படியான ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று டோலிவுட் ஊடகம் தெரிவித்திருந்தனர். இவ்வாறுஇருக்கையில்  ஏற்கனவே நடிகை சோபிதாவுடன் காதலில் இருப்பதாகவும் ரகசியமாக நாக சைதன்யா நடிகையுடன் சென்று வருவதாகவும் சொல்லப்பட்டது.

மேலும்  இதை சமந்தா தான் வைரலாக்கினார் என்று கேள்வியையும் நாக சைதன்யா ரசிகர்கள் கூறி வந்தனர்.இவ்வாறுஇருக்கையில்  நாக சைதன்யாவும் சோபிதாவும் வெளிநாட்டில் அவுட்டிங் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement