• Jul 25 2025

படப்பிடிப்பில் சமந்தாவை முயல் கடித்து விட்டது... அவரே கூறிய அதிர்ச்சித் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

யசோதா படத்தினைத் தொடர்ந்து தற்போது சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. அதாவது காளிதாஸ் இயற்றிய சாகுந்தலம் என்ற புராண கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக, சமந்தாவும் சுஃபியும் சுஜாதாயும் புகழ் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது சமந்தா படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அந்தவகையில் அவர் கூறும்போது "எனக்கு மலர்கள் என்றால் அலர்ஜி. சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக நடித்தபோது பல சந்தர்ப்பங்களில் கையை சுற்றியும் கழுத்திலும் மலர் மாலைகளை போட்டுக் கொண்டதால் உடல் எல்லாம் எனக்கு தழும்புகள் வந்துவிட்டன. 


முதல் நாள் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது நாள் டாட்டூ மாதிரி உடம்பில் காட்சியளிக்க ஆரம்பித்து விட்டது. பின்னர் ஆறு மாதங்கள் அவை அப்படியே மச்சங்கள் போல இருந்தது. சூட்டிங் சமயத்தில் அந்த மச்சங்கள் தெரியாமல் மேக்கப்புடன் சேர்த்து கவர் செய்தேன்" என்றார்.


மேலும் "தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் சகுந்தலை கதாபாத்திரத்திற்காக நானே சுயமாக டப்பிங் பேசினேன். அது எனக்கு மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஒரிஜினல் வாய்ஸ் அவசியம் என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு படப்பிடிப்பின் போது என்னை ஒரு முயல் கடித்து விட்டது. செட்டில் நிறைய முயல்கள் இருக்கும். அவற்றில் ஒன்று என்னை கடித்து விட்டது.அதற்கு முன்பு வரை எனக்கு மிகவும் பிடித்திருந்த முயல்கள் அது முதல் பிடிக்காமல் போய்விட்டது'' எனவும் கூறியுள்ளார் சமந்தா.

Advertisement

Advertisement