• Jul 25 2025

சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவான ஆர் யூ ஓகே பேபி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை  நீதிமன்றம்  தடை செய்ததனையடுத்து . அதன் பின்னர் படங்களை இயக்குவதை மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்

. இவர் மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார் .கடைசியாக தமிழில் ‘இந்த நிலை மாறும்’ என்கிற படத்தில் நடித்த அவர், தற்போது ‘ஆர் யூ ஓகே பேபி’ என்கின்ற படத்தினை  இயக்கியிருக்கிறார்.சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சந்தித்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கி இருப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். 

ஒரு குழந்தைக்காக இரண்டு தாய்மார்கள் உரிமை கோரும் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை அவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, நடிகை அபிராமி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


Advertisement

Advertisement