• Jul 24 2025

சர்ச்சைகளுக்கு செவிமடுக்காது... பழைய நிலைக்குத் திரும்பிய சம்யுக்தா... வைரல் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரபல சீரியல்களில் ஒன்று 'சிப்பிக்குள் முத்து'. இதில் நடித்து பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் தன்னுடன் இந்த சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். பிரிவிற்காக இவர்கள் இருவரும் மாறி மாறிக் கூறி வரும் காரணங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்கள் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த பிரிவிற்கு முக்கிய காரணம் சம்யுக்தாவுடன் இணைந்து 'நிறைமாத நிலவே சீரியலில் நடித்த ரவி தான் என்றும் ஒரு தகவல் வெளியானது.


இவர்கள் இருவரும் பிரிந்து பல நாட்கள் ஆகியும் இன்றுவரை இவர்கள் இருவர் குறித்த சர்ச்சை மிகுந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் சம்யுக்தாவோ அவை எவற்றையும் செவிமடுக்காது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். 

இதனை இவர் தற்போது வெளியிட்டுள்ள க்யூட் வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது. 


Advertisement

Advertisement