• Jul 26 2025

அப்துலுக்கு பதிலடி கொடுத்த சந்தியா – செந்திலை தனது கைவசம் கொண்டு வந்த அர்ச்சனா-ராஜா ராணி 2 இன்றைய எபிஷோட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் ராஜா ராணி 2.அந்த வகையில் இந்த சீரியலில்  என்ன நடந்தது என்று பார்ப்போம்.அதாவது  பயிற்சியாளர்களுக்கு சைக்கிள் பயிற்சி கொடுக்க புதியதாக ஒருவர் வந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அப்போது அப்துல் உங்களுக்கு தான் உடம்பு முடியலையே நீங்க வேணா ரெஸ்ட் எடுத்துக்கோங்க, நான் வேணா கோச் கிட்ட பேசுறேன் என சொல்ல உங்க வேலையை நீங்க பாருங்க என்னால முடியும் என சந்தியா கூறுகிறார்.

அடுத்து இவர்களுக்கு ஹேர் சைக்கிளிங் நடக்க அதில் அப்துல் பிரமாதமாக பர்பாமன்ஸ் செய்ய சந்தியா வழக்கம் போல் பாதியில் முடியாமல் நிறுத்தி விடுகிறார். இதை வைத்து அப்துல் நக்கல் அடிக்க சந்தியா இத சரியா செய்து இவன் மூக்க உடைக்காமல் விட்டுட்டோமே என வருத்தப்படுகிறார். அடுத்து சைக்கிளிங் போட்டி நடக்க அதில் சந்தியா நன்றாகவே பர்பாமென்ஸ் செய்கிறார்.


பிறகு நாளைக்கு இதை வைத்து ஒரு போட்டி இருக்கிறது அது வித்தியாசமாக இருக்கும் என விதிமுறைகளை கூறுகிறார் கோச். இது ஒரு புறம் இருக்க அடுத்தாக அர்ச்சனா பத்மநாபன் தேர்தலில் நிற்க வைப்பது பற்றி செந்திலிடம் ரகசியமாக பேச இந்த விஷயத்தை வீட்டில் சொல்லிவிடலாம் என செந்தில் சொல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார். இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என அர்ச்சனா கூறிவிடுகிறார்.


அடுத்து சந்தியா ஜோதி மற்றும் சேத்தான் இடம் பேசிக் கொண்டிருக்கும் போது சரவணன் போன் போட ஜோதி ஃபோனை வாங்கி பேசுகிறார். பிறகு சேத்தான் சரவணன் இடம் பேசுகிறார். அடுத்து சந்தியா சரவணன் இடம் பேசும்போது சரவணன் விடுகதைக்கு பதில் கிடைத்துவிட்டது என பதில் கூறுகிறார். நாளைக்கு சைக்கிள் ரேஸ் நடப்பது பற்றி சொல்ல அது ரொம்ப கஷ்டமான விஷயம் பார்த்து பண்ணுங்க என சரவணன் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement