• Jul 25 2025

சரவணன் மற்றும் கௌரியை காப்பாற்ற சந்தியா எடுத்த முடிவு.. சிக்கிய தீவிரவாதி – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 சந்தியா அதிகாரிகளின் பேச்சை வேறு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையோடு சரவணன் மற்றும் கௌரியை காப்பாற்ற காட்டுக்குள் செல்ல முடிவெடுக்கிறாள்.

அப்துல் மற்றும் சேத்தன் என இருவரும் இந்த விஷயம் அறிந்து நாங்களும் உங்களோ உன்னோட வரும் என்ன சொல்ல சந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு காட்டுக்குள் செல்கிறார். எனினும் அப்போது அங்கே பழங்குடியின மக்கள் காளி கோவிலுக்கு பூஜை செய்ய கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். 


அப்போது அங்கு வரும் சந்தியா இங்கே சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறது, சந்தேகப்படுவது போல் நீங்கள் யாரையாவது பார்த்தீர்களா என கேட்க அப்போது பாட்டி ஒருவர் மூன்று பேரை பார்த்ததாக சொல்கிறார். அத்தோடு அவர்கள் முகமூடி அணிந்து கொண்டிருந்ததாகவும் கையில் துப்பாக்கியுடன் நீ வச்சுட்டு இருக்க மாதிரி அந்த போன் வச்சிட்டு இருந்ததாக சொல்கின்றனர்.


இதன் பின்னர் சந்தியா காட்டுக்குள் செல்ல ஆரம்பிக்க தீவிரவாதி ஒருவன் வந்து சந்தியாவிடம் விஷயத்தை சொன்னதை தெரிந்து இந்த மக்களைத் தாக்க முயற்சி செய்ய அப்போது சந்தியா அங்கு வந்து தீவிரவாதியை பிடிக்கிறார். மரத்தில் கட்டி வைத்து உண்மையை வெளியே கொண்டு வர முயற்சி செய்ய அவன் சொல்ல மறுக்க அதன் பின்னர் அவன் கையில் இருந்த மேப்பை பிடுங்கி காட்டுக்குள் செல்கிறார்.

மறுபக்கம் தீவிரவாதிகள் 6 மணி வரைக்கும் தான் டைம் அதன் பிறகு போலீஸ் டிமாண்ட் நிறைவேற்றவில்லை என்றால் உங்களை கொன்று விடுவோம் என சொல்ல ஜோதி சரவணன் தன் கையால் கொல்ல வேண்டும் என சொல்ல செல்வம் அதற்கு சம்மதிக்கிறான்.

இதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதிகளை அழிப்பது தான் எங்களுடைய நோக்கம். இதில் நமது தரப்பிற்கு இழப்பு ஏற்பட்டாலும் நாங்கள் எங்களது முயற்சிகளில் இருந்து பின் வாங்குவதாக இல்லை எனக்குள்ள சிவகாமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இவ்வளவு நடந்திருக்கு அந்த சந்தியா ஒரு போன் பண்ணி விஷயத்தை சொன்னாளா ராட்சசி, அவ மட்டும் சரவணன் இல்லாமல் இங்கு வரட்டும் வச்சிக்கிறேன் என கோபத்தோடு உள்ளே செல்ல இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement