• Jul 24 2025

Sandy-க்கு அப்பறம் இன்னொரு Love இருந்துச்சு..அவரின் மகள் என்னை இப்படி கூப்பிட்டது மறக்க முடியல...பல உண்மைகளை உடைத்த காஜல்..!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சாண்டி, நடிகையும் முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளருமான காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார்.சில வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, பின்னர் விவாகரத்து பெற்றனர்.

சாண்டி பின்னர் சில்வியாவை மணந்தார். இவர்களுக்கு லாலா என்ற பெண் குழந்தையும், ஷான் மைக்கேல் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.இந்த நிலையில் காஜல் பசுபதி அண்மையில் சாண்டியின் வீட்டிற்கு திடீரென விசிட்டடித்திருந்தார்.


அத்தோடு சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் எடுத்துக் கொண்ட படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பாசிட்டிவ்வாக கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர் இது குறித்து பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.அதில் லாலா வளர்ந்திட்டா அதனால் சாண்டி லாலாவைப் பார்த்து ஆண்ட்டி என்று சொல்லு என்று சொன்னான்.லாலாவும் ஆண்ட்டி என்று கூப்பிட்டாள். நான் என்னோட தம்பி பிள்ளைகளையே ஆண்ட்டி என்று கூப்பிட விடமாட்டேன்.


அவன் சொல்லும் போது கடுப்பாகிச்சு. நான் சாண்டி வீட்டுக்கு போய்ட்டு வந்ததற்கு பிறகு எல்லாரும் நல்ல விதமாகத் தான் சொல்லி இருந்தாங்க.நான் சாண்டிக்கு அப்பிறமும் ஒருத்தரை லவ் பண்ணினேன். இதை யாருக்கும் சொன்னதில்லை.எனக்கு அசிங்கமா கமெண்ட் போறவங்களை பற்றி எல்லாம் கவலை இல்லை.இப்படி அசிங்கமாக போடுறவங்களை பிளக் பண்ணிடுவேன்.


அதே மாதிரி எனக்கு தனியாக இருக்கிறதை நினைச்சா கவலை இல்ல. நான் இப்பவும் சாண்டியத்தான் நினைச்சிட்டு இருக்கிறேன் என்று மக்களே தவறாக நினைச்சிடாதீங்க.சாண்டியை நான் நல்ல ப்ரண்டாகத் தான் பார்க்கிறேன் என்றும் ஜாலியாக அதில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement