• Jul 25 2025

மன உளைச்சலால் குழந்தைகளுடன் செட்டிலாகிய சங்கீதா... மனம் திறந்து உண்மைகளை உடைத்த தோழி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது லியோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.எனினும் இதற்கிடையில் விஜய் பற்றிய தனிப்பட்ட விசயங்கள் குறித்த வதந்தி செய்திகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய் மனைவி வராததில் இருந்து ஆரம்பித்து கீர்த்தி சுரேஷை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் விஜய் என்பது வரை இணையத்தில் வைரலாகி பேசப்பட்டது. இவ்வாறுஇருக்கையில்  தனியார் ஊடகம் ஒன்று டிவிட்டர் பக்கத்தில் சங்கீதா - விஜய் விவாகரத்து குறித்த தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளனர்.

அதாவது , சமீபகாலமாக விஜய்யால் சங்கீதா மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அதனால் குழந்தைகளோடு லண்டனில் வசித்து வருவதாகவும் அதனால் மன கஷ்டத்தில் விஜய் விவாகரத்துக்கு முடிவெடுத்ததாகவும், சங்கீதாவின் தோழிகள் கூறினார்களாம்.

அதேபோல், பட தோல்விகளால் மனதளவில் விஜய் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல வெற்றிகளால் தாய், தந்தையை பார்க்காமல் இருந்து வந்த விஜய் தற்போது பெற்றோர்கள் மற்றும் குழந்தை மனைவியை புறக்கணித்தும் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வமாக கூறினால் தான் உண்மை வெளிப்படும் என்று அந்த ஊடகம் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறது.




Advertisement

Advertisement