• Jul 24 2025

தாத்தா வாங்கிக் கொடுப்பதை விஜய்யின் மகன் வாங்கத் தயங்குவது எதனால்..? காரணம் சங்கீதா தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியின் ஒரே மகன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், இன்று உச்சநடிகராக உயர்ந்தமைக்கு காரணம் அவரது தந்தை தான்.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது அப்பாவான இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகருக்குமான உறவு சுமூகமாக இல்லை. அதாவது தனது பெற்றோரை பிரிந்து தனது மனைவி, மகன், மகள் என தனிக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார் விஜய். 

இதனைத் தொடர்ந்து தனது மகன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை, தன்னையும் தனது மனைவியையும் சந்திப்பதில்லை என சினிமா வட்டாரத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் பலவாறாகப் புலம்பி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.


மேலும் விஜய் இவ்வாறு தனது பெற்றோரை விட்டு விலகி இருக்க அவரது மனைவியான சங்கீதாதான் காரணம் என தகவல் ஒன்று ஏற்கெனவே பரவியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய பேரன் மற்றும் மருமகள் சங்கீதா மனம் திறந்து பேசியுள்ளார்.


அதாவது " மருமகள் சங்கீதா தன்னுடைய பிள்ளைகளை பார்த்துக்கொள்வதில் ரொம்பவே கவனமாக இருப்பார். அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது என அனைத்து விஷயங்களையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வார் " எனக் கூறியுள்ளார்.

மேலும் "நான் என்னுடைய பேரன் சஞ்சய்க்கு எதாவது கொடுத்தால் கூட, சங்கீதாவின் அனுமதியோடு தான் சஞ்சய் அதனை வாங்கி கொள்வார். அப்படி கவனமாக தன்னுடைய பிள்ளைகளை சங்கீதா வளர்த்து வருகிறார் " எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement