• Jul 25 2025

நடிகர் விஜய்யை கடுமையாக திட்டிய சங்கீதா.. இதுக்கு காரணமே சாந்தனு - கிகி தானா? வெளியான ஷாக்கிங் தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்பது போல் தொடர்ந்து பல விதமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என அதன்பின் தெரியவந்தது.

விஜய் - சங்கீதா திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், நடிகர் விஜய்யை அவரது மனைவி சங்கீதா கடுமையாக திட்டிய சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சாந்தனுவின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், அவர் கையால் தாலி எடுத்துக்கொடுத்துள்ளாராம்.

விஜய் தாலி எடுத்து கொடுத்து தான் சாந்தனு, கீர்த்தி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை விஜய் தனது மனைவி சங்கீதாவிடம் வீட்டிற்கு சென்றவுடன் கூறியுள்ளார்.

இதை கேட்டவுடன் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுப்பது என்பது பெரியர்வர் செய்யவேண்டிய விஷயம், நீங்க ஏன் செஞ்சீங்க என விஜய்யை திட்டினாராம் சங்கீதா. இந்த விஷயத்தை சாந்தனு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement