• Jul 24 2025

தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத் வாங்கியுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக விஜய்யின் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான, ஆனால் இம்முறை விஜய் லோகேஷுடன் இணைவதால் அந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. கடந்தமுறை இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருந்தார் லோகேஷ்.

ஆனால் இம்முறை தளபதி 67 திரைப்படத்தை முழுக்க முழுக்க தன் பாணியில் உருவாக்கி வருகின்றார் என தகவல் வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியது படக்குழு.


இதையடுத்து இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின் போன்றவர்கள் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் அறிவிப்பாக இப்படத்தின் பூஜை போடப்பட்ட வீடியோ வெளியாகி செம வைரலாகி வருகின்றது. தளபதி 67 படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.


இப்படத்தில் நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார்.இப்படத்திற்காக அவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement