• Jul 24 2025

மீண்டும் இணையும் சஞ்சீவ் - ஆல்யா தம்பதியினர்; காதலர் தினத்தில் தகவலை கசியவிட்ட பாடல் குழுவினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக ஆலியா மானசா ஆகிய இருவரும் நடித்து வந்தனவர். இவர்கள் இருவரினதும் ஜோடிப் பொருத்தம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இந்த சீரியலை அடுத்து ரீல் ஜோடியாக இருந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்போது ஐலா என்ற பெண் குழந்தையும் அர்ஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்தின் பின்னர் இருவரும் பிஸியாக நடித்தும் வருகின்றனர்.


அந்த வகையில் தற்பொழுது சஞ்சீவ் சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் கதாநாயகனாகவும் ஆல்யா மானசா இனியா என்னும் சீரியலில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் தற்பொழுது இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இப்பாடலுக்கு நடன இயக்குநராக சித்தார்த் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்த அறிவிப்பை ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement