• Jul 25 2025

சர்பாட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்- உற்சாகத்தில் நடிகர் ஆர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!


 இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா  தனது 34 வது படத்தில் நடித்து வருகின்றார்.ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில்,உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

இப்படத்தில் வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடித்து வருகின்றார்.இந்த படத்தையும் கிராமத்து பின்னணியில், அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படமாக இயக்குநர் முத்தையா எடுத்து வருகின்றார்.


இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சர்பாட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.


இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்படத்தையும் பா. ரஞ்சித் தான் இயக்கவுள்ளார்.இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement