• Jul 24 2025

ட்ராண்பிரண்ட் உடையில் தனது நிறைமாத வயிற்றை காட்டியபடி போஸ் கொடுத்த சர்பாட்டா பரம்பரை திரைப்பட நடிகரின் மனைவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

எஸ்.எஸ் மியூசிக்கில் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் பூஜா ராமச்சந்திரன். இதனைத் தொடர்ந்து  காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா, அந்தகாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளப்படங்களிலும் நடித்து அனைத்து ஆடியன்சுக்கும் தெரிந்த முகமான மாறினார் .


 இவர் கிரெக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கைனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த காதல் தம்பதியினர் வாரஇறுதி நாட்கள் வந்துவிட்டால் போதும் சும்மா ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள். கடந்த டிசம்பர் மாதம் பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை இருவரும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூஜாவுக்கு கடந்த மாதம் வளைகாப்பு நடைபெற்றது.


குழந்தை பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், நடிகை பூஜா ராமச்சந்திரன் கடற்கரை மணலில் ட்ராண்பிரண்ட் உடையில் தனது நிறைமாத வயிற்றை காட்டியபடி ஓய்யாரமாக நடந்து போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, வாழ்க்கையை ரசித்து வாழுங்கள், நமக்கான நேரம் நேரம் குறைவாக உள்ளது, எனவே மற்றவர்களின் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.. ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement