• Jul 23 2025

இலங்கைத் தமிழராக களமிறங்கும் சசிகுமார்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சசிகுமார் மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான திரில்லர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் சத்யசிவா, 'இதுவரை திரைப்படத் தயாரிப்பாளர்களால் தொடப்படாத ஒரு விஷயத்தை இந்தப் படம் கையாள்கிறது. 

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் சசிகுமார் இலங்கைத் தமிழராக நடிக்கிறார்.வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் ஒரு பீரியட் டிராமா' என்று விளக்குகிறார். 

குறித்த படம் '1950கள் மற்றும் 80களில் நடைபெற்ற  சம்பவங்களை கதைக்களமாக கொண்டுள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தில் சசிகுமார் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார். இன்னும் 5 முதல் 6 நாட்கள் ஷூட்டிங் பாக்கி உள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் ஒரே நேரத்தில் செய்து வருகிறோம் என படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பீஷ்ம பர்வம் புகழ் மலையாள நடிகர் சுதேவ் நாயர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். அத்துடன்  கேஜிஎஃப் புகழ் மாளவிகாஇ,பாஸ் வெங்கட் ஆகியோரும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement