• Jul 26 2025

உடல் எடை மெலிந்து.. வயோதிபத் தோற்றத்திற்கு மாறிய விஜயகாந்த்... நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்த சத்யராஜ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவரே கேப்டன் விஜயகாந்த். தன்னுடைய கம்பீரமான நடிப்பின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் உருவான வெற்றிப் படங்களோ ஏராளம். 


அந்தவகையில் இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் களமிறங்கினார். இருப்பினும் இதன்பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த், மீண்டும் பழையபடி எப்போது கம்பீரமான கேப்டனாக வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.


இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று கேப்டன் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த சத்யராஜ், அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதாவது தமிழ் திரையுலகில் சமகால நடிகர்களாக அறிமுகமாகி, தற்போது 30 ஆண்டுகளைத் தண்டியும் நட்புடன் பழகி வரும் விஜயகாந்தும், சத்யராஜும் நேற்றைய தினம் திடீர் சந்திப்பு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement