• Jul 25 2025

சித்தார்த் மற்றும் பொம்மியை பிரிக்க சாவித்திரி போட்ட பிளான்- செம குஷியில் இருக்கும் குடும்பத்தினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் நினைத்தாலே இனிக்கும். அந்த வகையில் இதையடுத்து வரும் நாட்களில் சீரியலில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, பத்மநாபன் நகையை எடுத்துச் சென்று கொல்லனிடம் கொடுத்து விட வீட்டில் அனைவரும் நகையை காணாமல் பதறுகின்றனர். போதை தெளிந்ததும் பத்மநாபன் அன்னலட்சுமி போட்டோ முன்பு நின்று கண்ணீர் வடிக்க குடும்பத்தில் உள்ளவர்கள் நடந்தது நடந்து விட்டது என மனதை தேற்றிக்கொள்ள பொம்மி மொத்த நகையையும் அணிந்து கொண்டு வந்து நிற்கிறார். 


அதன் பிறகு தான் தெரிகிறது பொம்மி கொல்லனிடமிருந்து இது எங்களுடைய குடும்ப நகை என அனைத்தையும் வாங்கி வந்த விஷயம்.இதனால் கடுப்பாகும் சாவித்திரி சித்தார்த் பொம்மியை சந்தோஷமாக வாழ விடக்கூடாது என முடிவெடுக்க தமன்னா அவர்கள் இருவரும் இன்னும் சேர்ந்து வாழவே இல்லை என்ற உண்மையை உடைக்கிறாள். இதயத்தில் சாவித்திரி மருந்து ஒன்றை கலக்கி பொம்மிக்கு கொடுக்க அதை குடித்துவிட்டு அவள் வாந்தி எடுக்கிறாள்.

இதை எடுத்து வீட்டிற்கு டாக்டர் வர டாக்டரிடம் பணத்தை கொடுத்து பொம்மி கர்ப்பமாக இருப்பதாக சொல்ல சொல்கிறாள் சாவித்திரி. டாக்டரும் அப்படியே சொல்ல இந்த விஷயத்தை கேட்டு மொத்த குடும்பமும் சந்தோஷமடைய சித்தார்த் பொம்மி அதிர்ச்சி அடைகின்றனர்.



Advertisement

Advertisement