• Jul 24 2025

அட்ஜஸ்ட்மென்டிற்கு நோ சொன்னதால் அதிக சூடு இருக்கும் லைட்டை போட்டாங்க- காமெடி நடிகை அளித்த பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை தான்  தாரணி . இவர் தற்பொழுது சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.மேலும், இவர் வடிவேலுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும், பட்ஜெட் பத்மநாபன் திரைப்படத்தில் இவர் வடிவேலுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதில் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தினால் கோவை சரளாவுக்கு டப் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சில வருடங்களிலேயே இவர் காணாமல் போய்விட்டார்.

பின் படவாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை பக்கம் சென்ற இவர்  சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.அத்தோடு ஆரம்பத்தில் இவர் படங்களில் ஹீரோயினியாகவும் நடித்திருக்கிறார். 


இந்த நிலையில் சமீபத்தில் நடிகை தாரணி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை குறித்து கூறியிருந்தார், சினிமா உலகில் கொடுமை காலகட்டத்தில் எனக்கு பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். நான் நடித்த முதல் இரண்டு படங்களிலும் எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. பின் ஒரு படத்தில் நான் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குநர், கேமரா மேன் இருவருமே என்னிடம் அட்ஜஸ்ட் பண்ண கேட்டார்கள்.

நான் முடியாது என்று சொன்னவுடன் இயக்குநர் அமைதியாகிவிட்டார். ஆனால், கேமராமேன் மட்டும் பலமுறை என்னை வெளிப்படையாகவே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டார்.தங்கச்சி நடிகையா இருந்த உன்னை ஹீரோயினி ஆக்கி இருக்கிறோம் என்று கூறினார். உடனே நான், தயவு செய்து தப்பா எடுத்துக்காதீர்கள். நான் அப்படிதான் சினிமாவில் வந்தேனா என்று கேட்டுக் கொண்டு வாங்க.


தப்பா இருந்தால் என்ன சொல்றீங்களோ அதை நான் செய்கிறேன் என்று சொன்னேன். அவர், நான் இப்படி இந்த பதிலை சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு பிறகு சொல்வேன் கேமரா மேன் என்னை டார்ச்சர் செய்வதை விட்டு விட்டார். ஆனால், அவர் அதிக சூடு இருக்கும் லைட்டை என் மீது காட்டி கஷ்டப்படுத்தினார் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement