• Jul 25 2025

சரவணனிடம் ரொமான்ஸ் செய்யப் போன சந்தியா- தப்பிச் சென்ற ரவுடி- கோபத்தில் எஸ்.பி- 'ராஜா ராணி 2' இன்றைய எபிசோட்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 'ராஜா ராணி 2' சீரியலானது விறுவிறுப்பும், அதிரடித் திருப்பங்களும் நிறைந்த வண்ணம் சென்று கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் சந்தியா சரவணனுக்கு அருகில் நெருங்கி வர அப்போது அவருக்கு எஸ் பி இடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதாவது சொன்ன நேரத்திற்குள் ரவுடியை பிடிக்க வேண்டும் என ஆர்டர் போடுகிறார்.


அதன் பின்னர் சந்தியா மீண்டும் சரவணனுக்கு அருகில் நெருங்கி வர வேண்டாங்க அப்புறம் தப்பாகிவிடும் என சரவணன் சொல்ல, அப்படி என்ன ஆகிடும் என சந்தியா கேட்க சரவணன் ஏற்கனவே நீங்க பிராக்டிஸ்ல இருக்கும் போது இந்த மாதிரி நடந்து டேட் தள்ளிப் போச்சு, அதே மாதிரி திரும்பவும் ஆகிட போது என சொல்ல ஏன் ஐபிஎஸ் எல்லாம் குழந்தை பெத்துக்க கூடாதா என சந்தியா கேட்க, அதற்கு சரவணன் உங்களுக்கு ஓகேவா என சந்தியாவிடம் கேட்க, டபுள் ஓகே என சொல்ல இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் சந்தியா வேலைக்கு கிளம்பிச் செல்ல சிவகாமி இன்னைக்கு சஷ்டி விரதம் சாயங்காலம் பூஜை முடிகிற வரைக்கும் பச்ச தண்ணி கூட நீ குடிக்க கூடாது என அவரிடம் சொல்லி அனுப்புகிறார். பிறகு சிவகாமி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்குக்கின்றார், ஆனால் ஒரு கடையில் கூட அவரிடம் இருந்து யாரும் காசு வாங்கவில்லை. அதற்கு அவர் சந்தியாவால் இது ஒன்று மட்டும் தான் லாபம் எனக் கூறிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்.


இதனையடுத்து சந்தியா ரவுடி மகேஷ் என்பவரை சுற்றி வளைத்து பிடிக்க கடைசியில் வெயிலில் அவருக்கு மயக்கம் வந்து கீழே விழுந்து விட போலீஸ் காரர்கள் சந்தியாவை கவனிக்கின்றார்கள். இந்த சமயத்தில் ரவுடி மகேஷ் உடனே எஸ்கேப் ஆகிவிடுகிறான்.


ஏற்கனவே சந்தியா எஸ் பி க்கு போன் செய்து ரவுடியைப் பிடித்த விஷயத்தை கூறியிருந்த நிலையில் தற்போது அவன் தப்பி விட்டதால் சிக்கல் மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கின்றது. இவ்வாறாக இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. இதனையடுத்து என்ன நடக்கப் போகுது என்பதனை அடுத்த எபிசோட்டில் பார்ப்போம். 

Advertisement

Advertisement