• Jul 25 2025

அறுவைச் சிகிச்சை செய்த அப்பாஸ் இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்க- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான ‘காதல் தேசம்’, ‘மின்னலே’ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 

அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறினார்.தற்போது, நியூசிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவைச் சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து பதிவிட்ட அப்பாஸ், ‘மிகவும் பதற்றமாகிவிட்டேன். அனைவரின் பிராத்தனைகளுக்கு நன்றி.விரைவில் வீடு திரும்புவேன்’ எனத் தெரிவித்திருந்தார்.


மேலும் மருத்துவமனையில் இருந்து அப்பாஸ் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என பதிவிட்டு வந்தனர்.தற்போது நடிகர் அப்பாஸுடன் பிரபல PRO ரியாஸ் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சர்ஜரிக்கு பிறகு நடிகர் அப்பாஸ் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement