• Jul 26 2025

சாமியார் வேடத்தில் 'பாக்கியலட்சுமி' கோபி... எப்படி நடிச்சிருக்கார் பாருங்க... அவரே வெளியிட்ட வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர். அதேபோல் ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மாவும் நடித்து வருகின்றார். 


எத்தனை பேர் நடித்தாலும் இந்த சீரியலில் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இதன் வாயிலாக இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும் உருவாகி உள்ளது. 


கோபி நடிப்பில் எந்தளவிற்கு பிசியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் ஏதாவது ஒரு வீடியோவையோ அல்லது புகைப்படங்களையோ அடிக்கடி பதிவிட்டு வருவார்.

அந்தவகையில் தற்போதும் ஒரு வீடியோவை கோபி வெளியிட்டுள்ளார். அதாவது ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் இவர் சாமியார் வேடத்தில் நடித்திருக்கின்றார். இது குறித்த வீடியோவை வெளியிட்டு "கோபி மட்டும் இல்ல நான் இப்படியும் நடிச்சிருக்கேன்" என தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CtpurFAvvKS/?utm_source=ig_web_copy_link

Advertisement

Advertisement