• Jul 25 2025

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன 'காதல் மன்னன்' திலோத்தம்மா.. கணவர், குழந்தையோடு இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் மறக்க முடியாத படங்களில் ஒன்று 'காதல் மன்னன்'. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மானுநடித்திருந்தார். பொதுவாகவே அஜித்திற்கு ஜோடியாக நடித்த நடிகைகள் பலரும் முன்னணி நடிகைகளாகத் தான் தற்போது திகழ்ந்து வருகிறார்கள்.


ஆனால் துரதிஷ்டாவசமாக அஜித்துடன் நடித்த ஒரே படத்திற்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவில் இருந்து விலகி போய்விட்டார் நடிகை மானு. அந்தவகையில் காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக இவர் தன்னுடைய 16 வயதில் நடித்திருந்தார்.


இப்படம்திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமில்லாமல் நடிகை மானுவுக்கு நல்ல கேரியரையும் ஏற்படுத்தி தந்தது. இருப்பினும் அப்படத்திற்கு பின் 16 வருடம் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் மானு நடித்தார். 

தற்போது திருமணம் செய்து சிங்கபூரில் குடும்பத்துடன் செட்டிலாகியுள்ள மானு நடன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் சிங்கபூரில் உடல் நிலைக்குறைப்பாட்டால் சிகிச்சை பெற்ற போது மானு தான் அவருக்குப் பல உதவிகளை செய்திருந்தார். 


இந்நிலையில் தற்போது நடிகை மானு தன் கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement