• Jul 25 2025

44 வயதிற்கு பிறகு முதன்முறையாகப் பார்க்கின்றேன்- டிஸ்னிலான்ட் டூரை தனது குடும்பத்துடன் சென்று ரசித்த சமீரா ரெட்டி-

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் மென்மையான காதல் படங்களை இயக்கி பல வெற்றிகளை கொடுத்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான, 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி.


முதல் படத்திலேயே இவருடைய அழகும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ போன்ற படங்களில் படங்களில் நடித்தார். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.


ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் திடீர் என கடந்த 2014ம் ஆண்டு, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.


திருமணத்திற்கு பின்பு, ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு விலகிய சமீரா ரெட்டி இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய வாழ்க்கையை என்ஜோய் செய்து வருகிறார். மேலும் திரையுலகை விட்டு ஒதுங்கினாலும், சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டீவாக இருந்து வருகிறார்.


இந்த வகையில் தற்பொழுது முதன் முறையாக பாரீஸில் நடைபெறும் டிஸ்னிலான்ட் டூரை தனது குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement