• Jul 24 2025

“சிங்கிளாவே இருந்துவிடு” அண்ணனிடம் கூறிய தனுஷ்; தம்பியின் வார்த்தையை மீறி திருமணம் செய்த செல்வராகவன்!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரே குடும்பத்தில் பலர் பிரபலங்களாக இருப்பது வழமை. அவ்வாறே தனுஷின் குடும்பத்திலும் அண்ணன் இயக்குநராகவும், தம்பி நடிகராகவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திரையுலகில் நுழைந்து செய்த சாதனைகளோ ஏராளம்.


மேலும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் இதுவரை வந்த படங்கள் எல்லாமே செம ஹிட் தான். இதனால் அடிக்கடி இவர்கள் இருவரும் இணைந்து படம் எடுக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் தீராத ஆசையாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாகி செம வசூலில் சாதனை நிகழ்த்தி வருகின்றது. அதேபோல் இவரின் அண்ணனா செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படமும் வெளியாகி நன்றாக ஓடியதோடு சில சர்ச்சைகளையும் சந்தித்திருந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.


இதனைத் தொடர்ந்து செல்வராகவன் நிறைய பேட்டிகள் கொடுத்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டி ஒன்றிலும் நிறைய விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "எனக்கு சோனியா அகர்வாலுடன் விவாகரத்து நடந்த போது தனுஷ் என்னிடம் வந்து, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம், கடவுள் உனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருகிறார். இப்படியே இருந்து விடு. சிங்கிளாகவே வாழ்நாள் முழுவதும் இரு என கூறினார்" எனத் தெரிவித்திருந்தார்.


மேலும் "என் வாழ்க்கைக்கு மாறும் என எனக்கு நம்பிக்கை இருந்தது, அதேபோல் நான் 2ஆவது திருமணம் செய்து கொண்ட கீதாஞ்சலி எனது வாழ்க்கையை மாற்றிவிட்டார்" எனவும் செல்வராகவன் கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement