• Jul 25 2025

அந்த இரண்டு பெண் போட்டியாளர்களை வெளியே அனுப்புங்க...கமல் முன் கத்திய பிக் பாஸ் ரசிகர்கள்?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

.பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமாகியது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அத்தோடு இந்த சீசன் ஆரம்பமாகிய சில நாட்களிலேயே சண்டைகள், சர்ச்சைகள் ஆரம்பமானது. எனவே ரசிகர்கள் இந்த சீசனை  பெரிதும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

எனினும் இதைத்தொடர்ந்து இந்த சீசனில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக ஆரம்பத்தில் வலம் வந்தவர் ஜி.பி.முத்து. இவரின் வெகுளித்தமனமான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தினால் இவர் வீட்டை விட்டு தானாக வெளியேறினார்.

  தற்போது வரை அசல், ஷாந்தி, மஹேஸ்வரி, ஷெரினா, குயின்சி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் முன்பே அறிவித்துவிட்டார். அதன்படி சனிக்கிழமை எபிசோடில் ராம் வெளியேற்றப்பட்டார்.

அதன் பின் இன்றைய எபிசோடில் ஆயிஷா வெளியேற்றப்பட உள்ளார். அவரது எலிமினேஷனை கமல் அறிவித்தபிறகு தான் ஒரு ஷாக்கிங் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

ஆயிஷாவுடன் ஜனனியையும் வெளியே அனுப்புங்க என அந்த நேரத்தில் ஷோ ரசிகர்கள் கத்தி இருக்கிறார்கள். மேலும் இந்த தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த காட்சியை ஒளிபரப்புவார்களா இல்லையா என தெரியவில்லையே என்றும் சிலர் விஜய் டிவியை விமர்சித்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement