• Jul 25 2025

முதன்முறையாக டிவி ஷோவில் செந்தில்... இமான் கேட்ட கேள்வி... விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்... அட்டகாசமான வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.


இந்த ஷோவானது இதுவரை 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் மிகவும் நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் இந்த நிகழ்ச்சியினுடைய இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் முதன்முறையாக செந்தில் கலந்து கொண்டுள்ளார். இவருடன் இணைந்து இன்னும் பல நகைச்சுவை நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். 


அதில் பாடலினுடைய backround music ஒளிபரப்பப்பட்டு பாடலினைக் கண்டு பிடிக்குமாறு சொல்கின்றனர். அப்போது "ஊருவிட்டு ஊரு வந்து.." பாடல் டியூன் ஒலிக்க விடுகின்றது. செந்தில் அந்த பாடலினைக் கண்டு பிடித்து விடுகின்றார். அதுமட்டுமல்லாது தான் அந்தப் படத்தில் நடித்திருக்கேன் எனவும் கூறுகின்றார்.  

மேலும் இவருடன் இணைந்து இந்த ஷோவில் இமான் அண்ணாச்சியும் கலந்து கொண்டுள்ளார். அதில் இமான் செந்திலிடம் "இப்போ சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா" எனக் கேட்கின்றார். அதற்கு செந்தில் "சத்தியமாக நான் வச்சுக்கல" என்கிறார். இதனைக் கேட்டதும் அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.

இதோ அந்த சூப்பரான ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement