• Jul 24 2025

மோசமாக கோபத்தை காட்டும் செந்தில்.. அமுதா எடுத்த முடிவு, நடந்தது என்ன?- அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் இன்றைய எப்பிஷோட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் அமுதாவும் அன்னலக்ஷ்மியும்.இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 புவனா செந்திலிடம் உதவி ஒன்று கேட்க வர,பரமு-சின்னா, வடிவேலு-சுமதி கிண்டலடிக்க செந்தில் மனவருத்தம் அடைகிறான்.

அடுத்து அமுதா என்ன செய்வது என தெரியாமல் தவிக்க மறுநாள் காலையில் செந்தில் காலேஜூக்கு கிளம்பிக் கொண்டிருக்க, அமுதா அவன் டிரஸ்சை அயர்ன் செய்து வைத்திருக்க, செந்தில் அதை போடாமல் வேறு சட்டையை போடுகிறான். டிபன் பாக்ஸ் ரெடி செய்து வைத்திருக்க, அதை எடுக்காமல் செந்தில் காலேஜ்க்கு கிளம்புகிறான்.


பின்னர் காலேஜில் செந்தில் படித்துக் கொண்டிருக்க, HOD அவனை அழைக்க செந்தில் என்னவென்று கேட்க, அவர் ஒன்றும் சொல்லாமல் ஒரு ரூமை திறக்க, அங்கே அமுதா சாப்பாடு கொண்டு வந்து நிற்கிறாள். HOD அவனிடம் இவ்வளவு நாள் சாப்பிடாம அப்படியே படிச்சி கிழிச்சிட்ட, உன் பொண்டாட்டி உனக்கு கஷ்டப்பட்டு சாப்பாடு கொண்டு வந்திருக்கா, சாப்பிடு என அவனை மிரட்டி சாப்பிட வைக்கிறார்.

HOD பேச்சை கேட்டு அமுதா சிரிப்பை அடக்கிக் கொள்ள செந்தில் முறைத்தபடி சாப்பிடுகிறான். பிறகு

செந்திலிடம் அமுதா புவனா விஷயத்தை சொல்லாமல் போனதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறாள். அதாவது, நீ வந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதால் தான் கூப்பிடவில்லை என சொல்கிறாள்.


பின்னர் குமரேசன் திருமணமான வடிவேலுக்கு சீர் கொண்டு வருகிறான். தாலி பிரித்து கோர்க்க வேண்டும் என சொல்ல உமா தாலி அடகு வைத்து தான் அமுதா கல்யாணம் நடந்தது பற்றி நக்கல் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்த எபிஷோட்டில் தான் என்ன நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement