• Jul 26 2025

சீரியல் நடிகர் தேவ் ஆனந்திற்கு இப்படி ஒரு சோகமா... பாவமே குழந்தை கூட இல்லையாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்பட நடிகர்களை எந்தளவிற்கு நம்மால் மறக்க முடியாதோ அந்தளவிற்கு சீரியல் நடிகர்களையும் நம்மால் மறக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஒரு சில சின்னத்திரை நடிகர், நடிகைகள் அந்த சீரியலை விட்டுப் போனாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பார்கள்.

அவ்வாறு பல சீரியல்கல்களில் நடித்து ரசிகர்கள் பலரைக் கொள்ளை கொண்டவர் தான் சீரியல் நடிகர் தேவ் ஆனந்த். அந்தவகையில் இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடரில் நடித்திருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார் தேவ் ஆனந்த். அதாவது "முன்பை போல சீரியல் நடிகர்களுக்குள் ஒரு நட்பானது இல்லை என்றும் இப்போது அனைத்துமே மாறிவிட்டது" என்றும் கூறியிருக்கிறார்.


அதுமட்டுமல்லாது "எனக்கு பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் நடந்தது, ஆனால் இப்போது வரைக்கும் குழந்தை இல்லை. எனது தம்பி மகனை தான் வளர்ந்து வருகிறோம், என்னை அப்பா என்று தான் அவரும் அழைப்பார்" என மிகவும் கவலையுடன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement