• Jul 25 2025

சொத்துக்காக சீரியல் நடிகையை அடித்துக்கொலை செய்த மகன்- உடலை ஆற்றில் வீசிய கொடூர சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் மூத்த நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வீணா கபூர்.இவர் மும்பையில் ஜூஹு பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இவர் மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா, டல்: தி கேங், பந்தன் பெரோன் கே ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இது தவிர  பிரிட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இவரை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை என, வீணா குடியிருக்கும் சொசைட்டியின் பாதுகாவலர் ஜூஹூ காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார், அந்த அப்பாட்மெண்டின் சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிக்கிய வீணா கபூரின் மகன், சொத்துக்காக கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். தனது தாயின் பெயரில் இருக்கும் 12 கோடி மதிப்புடைய வீட்டை விற்று பணம் தரும்படி கூறியதாகவும். இதற்கு தாயார் மறுப்பு தெரிவித்ததால், அவருக்கும் எனக்கு வாக்குவாதம் முற்றியதாகவும். இதனால், ஆத்திரத்தில் பேஸ்பால் மட்டையால் அவரை பலமுறை தாக்கினேன் இதனால் அவர் உயிரிழந்து விட்டார் என்றார்.

இதையடுத்து, அவரது உடலை மும்பையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாதேரன் ஆற்றில் மூட்டை கட்டி வீசியதாக கூறினார்.இவருக்கு உதவியாக இருந்த வேலைக்காரன் சோட்டு என்பவரையும் போலீசார் சைது செய்துள்ளனர்.


மேலும் நடிகை வாணி கபூரின் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அவரது தோழி நீலு கோஹ்லி இரங்கல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement