• Jul 26 2025

பிரமாண்டமாக நடந்த சீரியல் நடிகை காயத்திரி யுவராஜின் வளைகாப்பு- வைரலாகும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ். அழகி, மெல்ல திறந்தது கதவு, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஷு தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலில் இருந்து அண்மையில் தான் விலகினார்.


இவர் ஒரு நடனக் கலைஞர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, மாடலிங், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். இவரது கணவர் யுவராஜூம் பிரபல நடனக் கலைஞர் தான். இந்த தம்பதிக்கு தருண் என்ற மகனும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் காயத்திரி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்கள்.


இந்த நிலையில் காயத்திரிக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தியிருக்கின்றார்கள்.அவர்களின் வளைகாப்புப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement