• Jul 23 2025

பிரசவத்திற்கு மேக்-அப்புடன் சென்ற சீரியல் நடிகை நக்ஷத்ரா - ஏன் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நக்ஷத்ரா. இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

அடுத்து புதிய சீரியல் நடிப்பார் என்று பார்த்தால் ஜீ தமிழ் சேனலில் சீரியல்களின் தயாரிப்பு நிர்வாக பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ குடும்பத்திற்கு நெருக்கமானவர் என சொல்லப்படுகிறது. அண்மையில் நக்ஷத்ரா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார், ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

நடிகை நக்ஷத்ரா பிரசவ அறைக்கு செல்லும் முன் எடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், முகத்தில் கிரீம் போட்டுக் கொண்டு, உதட்டில் லிப் பாம் போட்டுக் கொண்டு அதுவும் சிசேரியன் டெலிவரிக்கு ஃபுல் மேக்கப்புடன் நக்ஷத்ரா தயாராக, ஆபரேஷன் தியேட்டருக்கு போக போற மேக்கப் என்ன வேண்டிக் கிடக்கு என அவருடைய தாய் கேட்கிறார்.

அதற்கு நக்ஷத்ராவோ அப்பாவியாக என் குழந்தை என்னை முதல் முறையாக பார்க்கும் போது நான் அழகாக இருக்க வேண்டாமா என சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.

Advertisement

Advertisement