• Jul 25 2025

சினிமாவை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லத் திட்டமிட்ட ஷாருக்கான்.. அதுவும் இந்த வேலையா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியான படங்கள் சில காலமாக எதிர்பார்த்தளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காமையினால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.


அதன் பின்னர் மீண்டும் ஹீரோவாக நடிக்க வந்த இவர் நடிப்பில் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சியில் தீபிகா படுகோன் காவி நிற பிகினியை அணிந்து படு கவர்ச்சியாக நடித்திருந்தமையால் பதான் படத்தை திரையரங்கில் வெளியிடக் கூடாது எனப் பல எதிர்ப்புக்கள் கிளம்பி இருந்தன.

இருப்பினும் இத்தடைகள் அத்தனையையும் கடந்து பதான் படம் வெளியான 5 நாட்களில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் இதன் சக்சஸ் மீட் நேற்றைய தினம் நடந்தது. இதில் நடிகர் ஷாருக்கான் பல விடயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் " நான் சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. காரணம் இதற்கு முன்பு என் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை தழுவியது. இதனால் நான் சினிமாவில் இருந்து விலகி வேறு தொழிலுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்தேன்" எனக் கூறியுள்ளார்.


தொடர்ந்து அவர் பேசுகையில் "நான் ஹோட்டல் பிஸ்னஸ்காக சமையல் எல்லாம் கற்றுக்கொண்டேன். ஆனால் பதான் திரைப்படம் சினிமாவில் மீண்டும் எனக்கு ஒரு வாழ்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது" எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement