• Jul 25 2025

விமான நிலையத்தில் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டாரா... உடனே லட்சக்கணக்கில் விதிக்கப்பட்ட அபராதம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக் கான். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஷாருக் கான் ஒரே நேரத்தில் பல படங்களில் கடின உழைப்போடு கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் அட்லீ உடன் அவர் கூட்டணி சேர்ந்திருக்கும் ஜவான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


இந்நிலையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதாவது ஷாருக்கான் வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு விமானத்தில் திரும்பி வந்த போது ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு பல மணி நேரம் கழித்து தான் விடுவிக்கப்பட்டார் என செய்தி ஒன்று சமீபத்தில் பரவியது. 

அதுமட்டுமல்லாது அவர் 6.83 லட்சம் ருபாய் கஸ்டம்ஸ் கட்டிய பிறகு தான் ஷாருக்கானை வெளியில் அனுப்பினார்கள் எனவும் தகவல் பரவியது.  அனால் இது உண்மை அல்ல வந்தந்தி எனக் கூறப்படுகின்றது. அதாவது ஷாருக்கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படவில்லை, அங்கு அவரது பாதுகாவலர் ரவி தான் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.


அவர் கொண்டு வந்த பாக்கில் அப்போது பையில் 2 விலையுயர்ந்த வாட்ச் மற்றும் 4 காலி வாட்ச் பெட்டிகள் இருந்திருக்கிறது. அது மட்டுமின்றி iWatch Series 8 காலி பெட்டியும் கூடவே இருந்திருக்கிறது.

மொத்தமாக இந்த காலி வாட்ச் packageகளுக்கும் சேர்த்து கஸ்டம்ஸ் செலுத்த வேண்டும் என அதிகாரி சொன்ன நிலையில், ஷாருக்கான் உடனே அதற்கு ஒப்புக்கொண்டு 6.83 லட்சம் செலுத்திய நிலையில் பாதுகாவலர் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement