• Jul 25 2025

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் புதிதாக சரக்கு வியாபாரத்தை ஆரம்பித்த ஷாருக்கானின் மகன்- இரவு பார்ட்டியில் நடிகைகளுடன் செய்த சில்மிஷம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷாருக்கானின் மகன் தடைசெய்யப்பட்ட போதைப் பார்ட்டியை சொகுசு கப்பலில் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. மகனை ஜாமினி விடுவிக்க ஷாருக்கான் பெரும் போராட்டத்தையே நடத்தினார். பின்னர், தனது மகன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபித்து மகனை கைது செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்த நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


இந்நிலையில், ஷாருக்கானின் மகன் புதிதாக D'YAVOL எனும் சரக்கு பிராண்டை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்துக்காக இந்தி டிவி நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் பார்ட்டி ஒன்றை நடத்தி இருக்கிறார் ஆர்யன் கான். அதில், நடிகைகளுடன் செம ஜல்சாவாக ஆர்யன் கான் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.


ஆர்யான் கான் பார்ட்டி வைத்தாலே டிவி நடிகைகள் சும்மா குவிந்து விடுவது வழக்கமாகி வரும் நிலையில், சரக்கு நிறுவனத்துக்கான பார்ட்டியில் இந்தி டிவி நடிகைகள் ரோஷ்னி வாலியா, நைரியா பானர்ஜி உள்ளிட்ட பலரும் பங்கேற்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.


ஆர்யன் கான் உடன் படு நெருக்கமாக பார்ட்டியில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அந்த டிவி நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து ரொம்ப நாள் கழித்து ஆர்யன் கான் சிரிப்பதை பார்த்தோம் என்றும் கமெண்ட் போட்டுள்ளனர்.



Advertisement

Advertisement