• Jul 25 2025

சொகுசு கார் வாங்கிய ஷாருக்கான்… காரின் விலை மட்டும் இத்தனை கோடியா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்கள் ஷாருக்கானை செல்லமாக அழைத்து வருகின்றனர் இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவிலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

ஜீரோ படம் தோல்வி அடைந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக ஷாருக்கானின் எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில், ரசிகர் அனைவரும் ஷாருக்கானின் பதான் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அத்தோடு பதான் படம் ஜனவரி மாதம் 25ந் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பதான் திரைப்படத்தின் மகத்தான வெற்றியை அடுத்து, ஷாருக்கான் சுமார் ரூ.10 கோடி செலவில் புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை புதிதாக வாங்கி உள்ளார். அத்தோடு விலை உயர்ந்த கார் வாங்கியது குறித்து ஷாருக்கான், எதுவும் கூறாத நிலையில், மும்பை சாலைகளில் சுற்றி வரும் 555 என்ற எண் கொண்ட இந்த கார் ஷாருக்கானுடையது என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.


இந்தியாவில் மிகவும் பணக்கார நடிகரான ஷாருக்கானிடம் ஏற்கனவே புகாட்டி, பென்ட்லி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன. அத்தோடு இந்த கார்கள் ஒவ்வொன்றின் விலையும் பல கோடி மதிப்புடையது ஆகும். அந்த வரிசையில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என அப்பா,மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை வருகிற ஜூன் 2-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement