• Jul 25 2025

அண்ணிமாருக்கு எதிராக சவுண்டு கொடுத்த சக்தி- குணசேகரனின் வாயை மூடச் செய்த ஜான்சி ராணி

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில்  ரிஆர்பியில் முன்னணியில் நிற்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.அந்த வகையில் இந்த சீரியலில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஜனனியே வேண்டாம் என்று விவாரத்தில் கையெழுத்து போட்ட சக்தியே ஜனனிக்கு சப்போர்ட் செய்கிறார்.அவர், ஜனனியை பற்றி யாராவது ஏதாவது சொன்னீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அதையும் மீறி யாராவது கஷ்டப்படுத்தினால் நான் அதிகமா பேச வேண்டியது இருக்கும் என்று சொன்னது பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது. அத்துடன் ஜனனியை கையப்பிடித்து அப்பத்தாவிடம் கூட்டு போயி ஏன் எல்லாரும் இப்படி பேசுறீங்க. எனக்கு கேக்குறதுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கிறது என்று கூறுகிறார்.

அதற்கு அப்பத்தா இதெல்லாம் எந்த உரிமையில் நீ கேட்கிற அவ என்ன உன் பொண்டாட்டி என்கிற உரிமையா என்று அப்பத்தா கேட்க. அதற்கு சக்தி முடிவு பண்ண வேண்டியது இனிமேல் ஜனனி என்று கூறுகிறார். இதைக் கேட்ட ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து இருந்தால் அது கண்டிப்பாக பார்க்க நன்றாகவே இருக்கும்.


இதற்கிடையில் திடீரென்று இப்பொழுது மருமகளுக்குள் ஏன் இந்த மாதிரி விரிசல் விழுகிறது என்று தெரியவில்லை. இதுவரை நந்தினி ஒரு காமெடி பீஸ் என்று நினைத்தால் இவர் இன்று பேசியது சற்று வித்தியாசமாக இருக்கிறது. அடுத்தடுத்து என்னதான் நடக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்க முடியாத அளவிற்கு கதையை நகர்ந்து கொண்டு செல்கின்றது.

அடுத்ததாக நம்ம ஜான்சி ராணி, குணசேகரனிடம் நியாயம் கேட்டு போயிருக்கா. அதற்கு குணசேகரன், ஏய் என்னம்மா ஏன் இடத்துக்கு வந்துட்டு இந்த மாதிரி சத்தம் போடுற வேலைய வச்சுக்காத என்று கூறுகிறார். ஆனால் எதற்குமே அசராமல் ஜான்சி ராணி, சவுண்ட் விடுற வேலையெல்லாம் உன் வீட்டு பொம்பளைங்களோட நிறுத்திக்கோ என்று மிரட்டுவதை பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. ஆனால் குணசேகரின் திருட்டு மொழியை பார்த்தா ஏதோ ஜான்சி ராணி வச்சு டபுள் கேம் ஆட போறாரு என்பது போல் தெரிகிறது. இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement