• Jul 26 2025

வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்த சக்தியின் அம்மா...கார்த்திக் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அடுத்து என்ன நடக்கப்போகுது என பலரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில்  ஸ்ருதி கார்த்திக்கிடம் நான் உங்கள் பிள்ளை இல்லை என்று தெரிந்தும் ஏன் என்னை இவ்வளவு பாசம் காட்டி வளத்தீர்கள் என்று  கண்கலங்கி கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கார்த்திக் உறைந்து போய் நிற்கிறார்.


 இவ்வாறுஇருக்கையில் காதம்பரி நாங்கள் வீட்டை விட்டு வெளியே போகிறோம் என்று தனது பெட்டி படுக்கையுடன் வந்து கூறுகிறார். ஆனால் மல்லிகாவோ நீங்கள் எதற்கு வெளியே போக வேண்டும் நான் வெளியே போகிறேன் என்று சொல்லி மல்லிகாவும்வெளியே செல்ல முடிவெடுக்கிறார்.


இதனால் கார்த்திக் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.இவ்வாறுஇருக்கையில்  இந்த மாத இறுதிக்குள் மௌனராகம் தொடர் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் தொடரை ஏன் முடிகிறீர்கள் என்று ரசிகர்கள்  பலரும் சோகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். 

Advertisement

Advertisement