• Jul 24 2025

மாகாபாரதத் தொடரில் வந்த சகுனி மாமா காலமானார்... கவலையில் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'மகாபாரதம்' தொடரில் சகுனி மாமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குஃபி பெயின்டல். இவர் சமீபகாலமாக இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.


இதனால் உடல்நலம் குன்றிய நிலையில் 10 நாட்களுக்கு முன்பு இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இவர் உயிரிழந்துள்ளார்.


இவரின் இறப்பிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு குஃபி பெயின்டலின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

Advertisement