• Jul 25 2025

சம்பளம் தர மறுத்த தயாரிப்பாளருக்கு நேர்ந்த அவமானம்-4 மடங்கு லாபம் பார்த்த கமல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் அவ்வைசண்முகி. இது அவரது கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் ஹீரோவாகவும், சண்முகி என்கிற பாட்டி கேரக்டரிலும் நடித்து அசத்தி இருந்தார் கமல்ஹாசன். 

பெண்ணாக நடித்ததோடு மட்டுமின்றி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அவரே குரல் கொடுத்து இருந்தார். அவரின் இந்த கடின உழைப்புக்கு பரிசாக அப்படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது.


அவ்வை சண்முகி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ரூ.1.5 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொகை என்பதால், இதற்கு தயாரிப்பாளர் நோ சொல்லி உள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட கமல், அப்படி அந்த சம்பளத்தை தர முடியவில்லை என்றால் அவ்வை சண்முகி படத்தின் நான்கு ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார். இதற்கு தயாரிப்பாளரும் ஓகே சொல்லி இருக்கிறார்.

அவ்வை சண்முகி திரைப்படம் வெளியாகி அதிரிபுதிரியான வெற்றியை பெற்றதால், அப்படத்தை நான்கு ஏரியாக்களில் வெளியிட்ட கமல்ஹாசனுக்கு அதன்மூலம் ரூ.5 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்து இருக்கிறது. 


இதன்மூலம் இப்படத்திற்காக அவர் கேட்ட சம்பளத்தைவிட நான்கு மடங்கு லாபம் கிடைத்து இருக்கிறது. பேசாமல் கமல்ஹாசன் கேட்ட சம்பளத்தை கொடுத்திருக்கலாமோ. தப்பு கணக்கு போட்டுட்டோமே என அப்படத்தின் தயாரிப்பாளர் வருந்தினாராம். இப்படி கம்மி சம்பளத்தை கொடுத்து விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளருக்கு தனது மாஸ்டர் மைண்ட் மூலம் பாடம் புகட்டி இருக்கிறார் கமல்ஹாசன்.


Advertisement

Advertisement