• Jul 26 2025

சிக்கலில் மாட்டிய 'இந்தியன்' திரைப்படம்... ஏ.ஆர்.ரகுமானால் வந்த சோதனை... பதற்றமடைந்த ஷங்கர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கமலின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 'இந்தியன்'. இப்படத்தை மாபெரும் இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். அத்தோடு இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி எனப் பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தினுடைய மாபெரும் வெற்றிக்கு காரணம் அப்படத்தில் இடம்பெற்ற இசை தான். அதாவது இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அந்தவகையில் இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது ஸ்டுடியோவில் பாடல்களை கம்போசிங் செய்து ஒரு ஹார்டிஸ்க் மூலம் இந்திய கொண்டு வந்து சேர்த்திருந்தார்.


அந்த சமயத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் அந்த ஹார்டிஸ்க் ஸ்கேன் செய்த போது அனைத்து பாடல்களும் எதிர்பாராத விதமாக டெலீட் ஆகியுள்ளது. இதனையறிந்த ஷங்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு சிக்கல் வந்து விட்டது என நினைத்துப் பதற்றம் அடைந்து இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து அவசரஅவசரமாக மீண்டும் இந்தியன் படப் பாடல்கள் கம்போசிங் செய்து ஏ.ஆர்.ரகுமான் கொடுத்திருக்கின்றார். இவ்வாறு பல சிக்கல்களைக் கடந்து தான் இந்தியன் திரைப்படம் வெளியாகி இருந்தது.


எது எவ்வாறாயினும் இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படம் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement