• Jul 24 2025

அந்த நாளை மறக்காத ஷங்கர்... கமல் இப்படி பட்டவரா..?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

மயில்சாமி எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடியவர். ஆனால் அவரின் இறுதி சடங்கிற்கு இளம் நடிகர்களுள் கார்த்தி, சித்தார்த், விஜய் சேதுபதி தவிர வேறு யாரும் வரவில்லை. 


ரஜினி தனது அண்ணனின் சதாபிஷேகம் பெங்களூரில் முடித்துவிட்டு உடனே இறுதி சடங்கிற்கு வந்து பெரிய மரியாதையை செய்தார். இவ்வாறு இருக்கையில் கமலும், மயில்சாமியும் நெருங்கிய நண்பர்கள். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 


மயில்சாமியின் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய பிரசாத் லேப்பில் கமல் இந்தியன் 2 சூட்டில் இருந்துள்ளார். பெப்ரவரி 19ல் 2020 இந்தியன் 2 விபத்து நடந்த நாள் என்பதால் ஷங்கர் அன்றைய நாளில் ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் கமல் ஈரோடு கிழக்கு பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார். இவர் செல்லும் வழியில் மயில் வீட்டிற்கு சென்று ஒரு மலர் வலையமாவது வைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று இணையத்தில் மக்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement