• Jul 24 2025

ஷங்கரிடம் இருந்த கெட்ட பழக்கம்... உடைத்தெறிந்த சூப்பர் ஸ்டார்..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ஷங்கர், ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர்களின் கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது ஷங்கர், கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை பிரமாண்டமாக எடுத்து வருகிறார்.

பல வருடங்களாக இப்படம் இழுத்தடித்து வந்தாலும் தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. இவ்வாறுஇருக்கையில் தன்னிடம் இருந்த ஒரு கெட்ட பழக்கம் பற்றியும் அது ரஜினியால் எப்படி உடைத்தெறியப்பட்டது என்பது பற்றியும் ஷங்கர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக ஷங்கர் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டால் எப்போதும் ஒதுங்கியே இருப்பாராம். யாரிடமும் தாமாகவே சென்று பேச மாட்டாராம். ஏதோ ஒரு கூச்சம், தயக்கம் என்னை தடுத்துவிடும். அதனால் நான் எப்போதுமே ஓரமாக ஒரு இடத்தில் சென்று அமர்ந்து விடுவேன் என்று  தெரிவித்துள்ளார். எனினும் அப்போது ஒரு விழாவில் அவர் ரஜினியை பார்த்திருக்கிறார்.

அனைவரும் அவரிடம் சென்று பேசி இருக்கின்றனர். ஆனால் சங்கருக்கு மட்டும் ஏதோ ஒரு சங்கோஜம் இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் அப்போது ரஜினியுடன் இணைந்து எந்த படத்திலும் பணிபுரியவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அப்போது சூப்பர் ஸ்டார் தன்னை பார்த்ததை உணர்ந்து கொண்ட ஷங்கர் அமைதியாகவே இருந்திருக்கிறார்.

எனினும் அப்போது எதிர்பாராத விதமாக ரஜினியே அவரிடம் சென்று எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்திருக்கிறார். எனினும் அந்த ஒரு தருணம் ஷங்கரை நிலைகுலைய வைத்திருக்கிறது. தன்னை நினைத்து அவருக்கு ரொம்பவும் வெட்கமாகவும் இருந்திருக்கிறது. அவ்வளவு பெரிய நடிகர் தன்னிடம் வந்து பேசுகிறாரே என்று நெகிழ்ந்து போயிருக்கிறார்.

மேலும் அந்த சம்பவம் தனக்குள் இருந்த அத்தனை தடைகளையும் உடைத்து எறிந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன் பிறகு அனைவரிடமும் நான் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டேன். இதற்கு முக்கிய காரணம் ரஜினி தான் என்று பெருமையோடு கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் போன்ற ஒரு மாமனிதரை பார்க்கவே முடியாது என்றும் புகழாரம் சூடி இருக்கிறார்.

Advertisement

Advertisement