• Jul 24 2025

அவளும் நானும்- பாக்கியாவுடன் அமர்ந்திருக்கும் கோபி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- அப்போ ராதிகா யாரு சேர்?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் பழனிச்சாமிக்கும் பாக்கியாவிற்கும் திருமணம் நடைபெறப்போவதாக நினைத்துக் கோபி குழப்பி போயுள்ளார். 

வீட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் எல்லோரிடமும் பேசி வாங்கிக் கட்டி வருகின்றார். அதிலும் பாக்கியாவுகக அட்வைஸ்ட் பண்ண போய் பாக்கியாவிடம் நல்ல திட்டும் வாங்கியிருந்தார்.


எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்பதிலும் குறியாக இருந்து வருகின்றார். இதனால் பழனிச்சாமி வீட்டுக்கு நேராகச் சென்று பாக்கியாவைத் தன் மனைவி என்றும் அவள் கூட பேசக் கூடாது என்றும் கட்டளை போடுகின்றார்.

பழனி பாக்கியாவுடன் தான் பேசுவேன் என்பதில் உறுதியாக இருக்கின்றார். இது தொடர்பான எப்பிஷோட் இனி ஒளிபரப்பப்படவுள்ளது. இதனால் கோபிக்கு எப்போது பாக்கியாவுக்கு திருமணம் இல்லை என்பது தெரிய வரும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் பாக்கியாவுடன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் கோபி  அவளும் நானும் என்று கேப்ஷனும் கொடுத்திருக்கின்றார்.இந்தப் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement