• Jul 26 2025

அவர் ஒரு குளோபல் ஸ்டார்- பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தனுஷைப் புகழ்ந்த சமந்தா

stella / 3 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டிவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி அகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

திரைப்படங்களைத் தவிர வெப் சீரியல்களிலிலும் நடித்து வருகின்றார். அத்தோடு சோலோ ஹீரோயினாக யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.இவ்வாறு அயராத முயற்சியினால் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முதல் பாலிவூட் நடிகரான அக்சய் குமாருடன் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊ சொல்லுறியா மாமா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நடிகர் தனுஷ் குறித்து பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தனுஷ் ஒரு குளோபல் ஸ்டார் என்றும் இவருடன் இணைந்து தங்கமகன் படத்தில் பணியாற்றியதும் மகிழ்ச்சி எனஅவர் கூறியதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement